ராயப்பன்பட்டி பகுதிகளில் இரவு நேரங்களிலும் பஸ் போக்குவரத்து வசதி: பொதுமக்கள் கோரிக்கை

 

உத்தமபாளையம், ஜன. 10: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே கே.கே.பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதிகள் இருந்தும் இரவு 10 மணிக்கு மேல், அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இல்லை. அரசு பஸ்கள் காலையில் இருந்து இரவு வரை உத்தமபாளையம், கம்பம், என முக்கிய ஊர்களுக்கு செல்கிறது.

அதேநேரத்தில் ராயப்பன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து, இரவு நேரங்களில் எந்த பஸ்களும் இல்லாதநிலையில், ஆட்டோக்களில் ஏறி, பாளையம் அல்லது கம்பத்திற்கு செல்லவேண்டும். குறிப்பாக தொலைதூர ஊர்களாக உள்ள மதுரை, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் செல்ல பாளையம் வருவதற்கு, ராயப்பன்பட்டியில் இருந்து, தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி வர வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன்கருதி இரவு நேரங்களிலும் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்