ராயக்கோட்டையில் தக்காளி விலை உயர்வு

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில், விவசாயிகள் தக்காளியை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, தக்காளி கிலோ ₹200 வரை விற்றதால், அதிகளவில் தக்காளி பயிாிடப்பட்டது. இந்நிலையில் அதிக மழைப்பொழிவால், தக்காளி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. வரத்து அதிகாிப்பாலும், மற்ற மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் அதிகாித்ததாலும், தக்காளி விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ₹50க்கும் குறைவாகவே விற்றது. இதனால், கவலையடைந்த விவசாயிகள், தக்காளி தோட்டங்களுக்கு தண்ணீர் கட்டாமலும், தக்காளியை பறிக்காமலும், தோட்டத்தை பராமாிக்காமலும் விட்டனர். அதனால், தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. தற்போது விலை உயர்ந்து, நேற்று 25 கிலோ கொண்ட கிரேடு ₹350க்கு விற்றது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தோட்டங்களை பராமரிப்பு செய்து தண்ணீர் கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்….

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு