ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே 56 ஆண்டுகளுக்கு பின் ரயில் பாதை: ஆய்வுப் பணிகளில் அதிகாரிகள் மும்முரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி பகுதி கடந்த 1964 ஆம் ஆண்டு டிசம்.23 ஆம் தேதி ஏற்பட்ட புயலால்      கடலில் மூழ்கியது. எஞ்சிய பகுதிகள் தற்போது சுற்றுலா தலமாக உள்ளது. புயல் பாதிப்பால் ரயில் பாதை சேதமடைந்து கடலில் மூழ்கியதால் ரயில் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. 56 ஆண்டுகளுக்குப் பிறகு ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மண் ஆய்வுப்பணிகள் நடந்த நிலையில்  தனுஷ்கோடி, கம்பிப்பாடு முதல் கோதண்டராமர் கோவில் வரை உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அளவீடு பணிகளை தொடர்ந்து விரைவில் ரயில் பாதைக்கான பணிகள் தொடங்குமென கூறிய அதிகாரிகள் புதிதாக 3 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.       …

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!