ராமேஸ்வரத்தில் நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம், ஜூன் 12:ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் நாட்டுப் படகுகள் ஆய்வை நேற்று துவக்கினர். ராமேஸ்வரம், சங்குமால், ஓலைக்குடா, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீன்வளத் துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி ஆகியோரின் மேற்பார்வையில் நாட்டுப் படகுகள் ஆய்வு நேற்று துவங்கியது.

ஆய்வில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின்படி மீனவக் கிராமங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கருவிகள், கடல் பயணத்தின் போது பயன்படுத்தப்படும் பாதுகாப்புக் கருவிகள் ஆகியவற்றை மீன்வளத் துறையினா் ஆய்வு செய்தனர். படகுகளில் பதிவு எண்கள் தெளிவாக தெரியும்படி எழுதி வைக்க வேண்டும். பதிவு செய்யப்படாத நாட்டு மற்றும் பைபர் படகுகளை விரைவில் பதிவு செய்ய வேண்டும் என படகு உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை