ராமானுஜர் விருது குறித்து பரிசீலனை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசியதாவது: நிதி பற்றாக்குறை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வெற்றிகரமான நிதி மேலாண்மையை காட்டுகிறது. திருவள்ளுவர், பெரியார், காமராஜர் ஆகிய விருதுகளை கொடுக்கிறோம். பக்தி என்ற தனிசொத்தை பொது சொத்தாக்கிய ராமானுஜர் பெயரில் விருதை வழங்க வேண்டும் என முதல்வருக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள். இதற்கு நாங்கள் உங்களோடு தோளோடுதோள் நிற்கிறோம். அமைச்சர் பி.கே.சேகர்பாபு: ராமானுஜர்பால் எப்போதுமே அதிக அக்கறைக் கொண்ட கட்சி திமுக என்பதற்கு பல வரலாறு உண்டு. மதத்தில் புரட்சி செய்தவர் ராமானுஜர் என்ற தொடர் கலைஞரால் எழுதப்பட்டு தொடர்ந்து தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பப்பட்டது. நீங்கள் கூறிய கோரிக்கையை இந்த வாரத்திற்குள் முதலமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு செய்யச் சொல்லியிருக்கிறார். ஆய்விற்கு பிறகு அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றி தரப்படும்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை