ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு !

டெல்லி: ராமநாதபுரம் உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி பெற வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்காக 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி, நாகனேந்தல் ஆகிய கிராமப்பகுதிகளை உள்ளடக்கி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த திட்டத்தை ரூ.12,665 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் மேற்கொண்டது.மேலும், இந்த திட்டத்திற்கு தடை விதித்துள்ளதால் மாதத்திற்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு வாதாடியது. இதனையடுத்து, மனுதாரர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்