ராஜபாளையம் அருகே கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

*மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்புராஜபாளையம் : ராஜபாளையம் அருகே கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் உள்ள லட்சுமியாபுரம், சுண்டங்குளம், கீழ்மறைநாடு உள்ள கிராம பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். காலை பள்ளி செல்லும் வேலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் 8 கிலோமீட்டர் நடந்தே சென்று கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் மழை பெய்தால் அதிக அளவு தண்ணீர் வருவதால் தரைப் பாலத்தினை கடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் இயக்க பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் கூடுதல் பஸ் தற்போது வரை இயக்குவதற்கு உண்டான நடவடிக்கையில் ஏதும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலை வேளையில் சரியான நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டுமனை பகுதி உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை