ராஜபாளையத்தில் கோடைகால சிறப்பு வாலிபால் பயிற்சி முகாம்: 10 மாவட்டங்ளை சேர்ந்த 50 மாணவர்கள் பங்கேற்பு

ராஜபாளையம், ஏப்.30: ராஜபாளையம் காமராஜர் நகரில் உள்ள ஊர்காவல் படை அலுவலக மைதானத்தில் கோடை கால சிறப்பு வாலிபால் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு வாலிபால் கழகம் சார்பில் வரும் 7ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் தேர்வு செய்யப்பட்ட 50 மாணவர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ஆனந்த்பாபு, வாலிபால் விளையாட்டில் உள்ள பல்வேறு நுணுக்கங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறார். பயிற்சி நிறைவில், சிறப்பான பங்களிப்பை வழங்கும் 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில், தென் மண்டலம் சார்பில் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை