ராகு – கேது பெயர்ச்சி திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற ராகு – கேது பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா திருப்பாம்புரத்தில் சேஷபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலானது ராகு-கேது பரிகார ஸ்தலமாகவும் உள்ளது. ராகுவும், கேதுவும் இக்கோயிலில் சரீரமாக இருந்து இறைவனை வழிபட்டு அருள்பெற்றதால் ராகு, கேதுவுக்கு பெயர் பெற்ற தலமாக இருந்து வருகிறது. மேலும் 274 தேவார பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக உள்ள இக்கோயிலுக்கு பாம்புரநாதர், தென்காளகஸ்தி என்ற பெயர்களும் உண்டு. இங்கு வழிபட்டால் கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாகூர், கீழபெரும்பள்ளம், காளகஸ்தி ஆகிய 5 கோயில்களையும் வழிப்பட்ட ஒருமித்த பலன் உண்டு என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்