ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் சென்ற சரக்கு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழப்பு..!!

ரஷ்யா: ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் சென்ற சரக்கு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சைபீரியாவில் தரையிறங்குவதற்கு முன் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானம் இழந்தது. இதையடுத்து ரஷ்யாவின் இர்குட்சர்க் நகரம் அருகே விமானம் விபத்துக்குள்ளாகி கீழே நொறுங்கி விழுந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தில் சென்ற 9 பேரும் உயிரிழந்தனர். பெலாரஸ் நாட்டை சேர்ந்த 3 பேர், 2 ரஷ்யர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தில் சரக்கு எதுவும் கொண்டு செல்லப்படவில்லை. மாறாக 7 ஊழியர்களுடன் பயணிகள் 2 பேர் விமானத்தில் சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொட்டும் பனிமழையிலும் உடல்களை மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. …

Related posts

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

கனடாவில் 2 முறை நிலநடுக்கம்