ரயில் மோதி 2 மாடுகள் பலி; கடற்கரை – தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயில் நேற்று இரவு 7 மணி அளவில் வந்தது. எழும்பூர் ரயில் நிலையத்தை கடந்தபோது தண்டவாளத்தில் நின்ற 3 எருமைகள் மீது ரயில் மோதியது. இதில் 2 மாடுகள் உயிரிழந்தன. ஒரு மாடு படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்து, ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் வந்து உயிரிழந்த 2 எருமை மாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதால் மாடுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அடுத்தடுத்து கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுமார் ஒன்றரை மணிநேர போராட்டத்துக்கு பின்னர் மாடுகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டன. இதையடுத்து கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை சீரானது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்