ரயில்வே துறை பணிகளில் தமிழர்களுக்கு 50% இடம் ஒதுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு ரயில்வே துறையில், மொத்த பணியிடங்களில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 12 சதவீத இடங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 88 சதவீத இடங்களை பிற மாநிலத்தவர்கள் பறித்துக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள கடைநிலைப் பணிகள் முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 சதவீத இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் மத்திய அரசின் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…