ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி; சகோதரர்கள் கைது: 3 பேருக்கு வலை

திருவள்ளூர்: ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.2 கோடி வரையில் மோசடி செய்ததாக சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(29). இவரது நண்பர்கள் கண்ணாபிரான், முருகன், பாலாஜி, சீனிவாசன். இவர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தனர். இதனால் வேலைகேட்டு அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ், வெங்கடேசன், பாலாஜி, அரவிந்த், ராகுல் ஆகியோரை அனுகியுள்ளனர். அப்போது, அவர்கள் தங்களுக்கு ரயில்வேதுறையில் உயர் அதிகாரிகளை தெரியும் எனக் கூறி, ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய வாலிபர்கள் தலா ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளனர். இதையடுத்து வாலிபர்கள் நம்பும் வகையில் நியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினர். இந்நிலையில், பின்னர் அந்த நியமன ஆணைகள் போலியாக தயார் செய்து வழங்கியதை அறிந்து வாலிபர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதேபோல் 40 பேரிடம் ரூ.2 கோடி வரையில் ஏமாற்றியதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புகாரளித்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சகோதரர்களான அரவிந்த்(24), ராகுல்(26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக புஷ்பராஜ், வெங்கடேசன் மற்றும் பாலாஜி ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர். …

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

கலை நிகழ்ச்சி என அழைத்து சென்று பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்: உல்லாசத்துக்காக துபாய் சென்ற தமிழக விஐபிக்கள்

ரூ.12 லட்சம் கொள்ளை பணத்தில் பங்கு பிரிப்பு அடுத்தவர் மனைவியை அபகரித்து இன்ப சுற்றுலா சென்ற கொள்ளையன்