ரயில்களில் போகுது ரேஷன் அரிசி மூட்டை

கோவை, ஜூலை 16: கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகமாக நடக்கிறது. கோவை மார்க்கமாக கேரள மாநிலத்திற்கு லாரி, டெம்போ, வேன், ரயில், இரு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துகிறார்கள். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவேண்டிய உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பெயரளவிற்கு சோதனை செய்கின்றனர். வாணிப கழக குடோன், ரேஷன் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசி கோவை நகர், புறநகரில் உள்ள சில அரவை மில்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ரேஷன் அரிசி என கண்டறிய முடியாத அளவிற்கு பாலீஸ் போட்டு அரைக்கின்றனர். சில அரவை மில்களில் ரேஷன் அரிசியை மாவாக மாற்றி பாக்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள். சிலர் ரேஷன் அரிசி மாவை முறுக்கு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

மாதந்தோறும் சுமார் 300 டன்னிற்கும் அதிகமான ரேஷன் அரிசி அரவை மில்களில் அரைக்கப்பட்டு மூட்டைகளாக பேக்கிங் செய்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை மில்களில் இருந்து அரிசி பெறப்படுவது போல் குறிப்பிட்டு அரிசியை கேரளாவிற்கு கொண்டு செல்கிறார்கள். நிறம் மாற்றி பாலீஸ் போட்டு புதிய அரிசி போல் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் அரிசியை பாலீஸ் போட்டு அரைக்கும் மில்களில் இருந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கணிசமான அளவு மாமூல் தொகை வழங்கப்படுகிறது. அரவை மில்களில் ரேஷன் அரிசியை அரைக்க, பாலீஸ் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர், ரகசியமாக ரேஷன் அரிசியை அரைப்பதற்காகவே சிறிய அளவில் அரவை மில்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

முறைகேடாக ரேஷன் அரிசியை பாலீஸ் போட்டு அரைக்கும் மில்களில் சோதனை நடத்தினால் பல டன் எடையில் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ய முடியும். கோவை மார்க்கமாக கேரளா செல்லும் சில ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் நடக்கிறது. வழியோர ரயில் நிலையங்களில் பாசஞ்சர் ரயில்களில் மூட்டைகளை ஏற்றி கேரள மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இறக்குவது வாடிக்கையாகி விட்டது. இதை தடுக்க, ரயில்ேவ போலீசார் முன் வரவில்லை. தினக்கூலி வேலை போல் சில பெண்கள் அரிசி கடத்தலில் ஈடுபடுவதும் நடக்கிறது. இதை தடுத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். திருப்பூர் மருத்துவ மாணவர் சரவபெஇல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.’’

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை