ரயான் துணி உற்பத்தி ஒருவாரம் நிறுத்தம்

ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரயான் துணி உற்பத்தி இன்று முதல் ஒரு வாரத்திற்கு நிறுத்தம் செய்யப்படுவதாக விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக ரயான் நூலின் விலை எவ்வித மாற்றம் இல்லாத போதிலும், 120 கிராம் எடை கொண்ட துணியின் விலை 15 நாட்களுக்கு முன்னர் ரூ.28 ஆக இருந்தது. இப்போது ரூ.26க்கு கூட மார்க்கெட்டில் விலை போகாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், உற்பத்தி விலையைவிட மார்க்கெட்டில் ரயான் துணியின் விலையை குறைத்து கேட்கின்றனர். இந்த நஷ்டத்தை தவிர்க்க 3ம் தேதி (இன்று) முதல் 10ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரயான் துணி உற்பத்தி செய்யும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்படும் என்றார்….

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!