மோடியுடன் 23ல் நிதிஷ் சந்திப்பு

பாட்னா: ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்தும்படி வலியுறுத்த, பிரதமர் மோடியை 23ம் தேதி சந்திக்க உள்ள்தாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். ‘எஸ்சி, எஸ்டி.யை தவிர மற்ற பிரிவுகளை சேர்ந்தவர்களை கணக்கெடுக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லை,’ என்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இது தொடர்பாக பாட்னாவில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்தும்படி நேரில் வலியுறுத்த, பீகாரை சேர்ந்த அனைத்துக் கட்சி தலைவர்களும் வரும் 23ம் தேதி டெல்லி சென்று அவரை சந்திக்கிறோம். இதில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் எதிர்க்கட்சித்  தலைவருமான தேஜஸ்வி யாதவும் இடம் பெறுகிறார். ஜாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்துவது, அனைத்து பிரிவினருக்கும் நன்மை அளிக்கும்,’’ என்றார்.  …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்