மொபைல் கடையில் ரூ.5 லட்சம் கையாடல் செய்த ஊழியர் கைது

காரைக்குடி, ஜூலை 23: காரைக்குடியில் மொபைல் கடையில் ரூ.5 லட்சம் கையாடல் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பிரபல தனியார் மொபைல் கடையில் அப்துல் ஜாபர் (29) என்பவர் கடந்த சில வருங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அப்துக் ஜாபர், கொஞ்சம் கொஞ்சமாக கடையில் இருந்து ரூ.5 லட்சம் வரை கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கடை உரிமையாளர் மாரியப்பன், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதை தொடர்ந்து வடக்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அப்துல் ஜாபர் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி