மொபட் பெட்டியை உடைத்து பெண் வியாபாரியிடம் ரூ.4 லட்சம் கொள்ளை

ஆவடி: ஆவடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35). இவர், தனது வீட்டருகே காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் மஞ்சுளா தனது நகைகளை ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள ரெப்கோ வங்கியில் அடமானம் வைத்து ரூ 4 லட்சம் பணம் பெற்றுள்ளளார். பின்னர், அவர் அந்த பணத்தை மொபட்டில் சீட்டுக்கடியில் பூட்டி வைத்துள்ளார். பிறகு, ஆவடி மார்க்கெட்டுக்கு வந்து காய்கறி வாங்கியுள்ளார்.பின்னர், அவர் வீட்டுக்கு சென்று மொபட் பெட்டியை திறக்க முயன்றார். அப்போது, பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், அதிலிருந்த ₹4 லட்சம் கொள்ளை போயிருந்தது ெதரிந்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார். கடைக்கு சென்று காய்கறி வாங்கும் போது மர்ம நபர்கள் மஞ்சுளாவின் மொபட்டின் சீட்டுக்கு அடியில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிவந்தது. இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில் மஞ்சுளா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்….

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை