மே.வங்க ஆளுநரை மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநரை மாற்ற உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் மனுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநர் ஜெகதீப் தன்காருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ரமா பிரசாத் சர்க்கார் என்ற வழக்கறிஞர், ஆளுநர் தன்காரை மற்ற உத்தரவிடும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இதில் ‘மாநில அரசின் செயல்பாட்டில் ஆளுநர் ஜெகதீப் தன்கார் குறுக்கீடு செய்கிறார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்துகிறார். பாஜ.வின் பிரதிநிதியாக செயல்படுகிறார். மாநில அமைச்சர்களை ஓரம்கட்டி, அரசு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடுகிறார். எனவே, அவரை மாற்றும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று கூறியுள்ளார். தலைமை நீதிபதி பிரகாஷ் வத்சவா அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், ‘அரசியலமைப்பின் 361வது பிரிவின் கீழ் தனது பதவியின் அதிகாரங்கள், கடமைகளை செயல்படுத்தும் ஆளுநருக்கு நீதிமன்றம்  தடை விதிக்க முடியாது. மேலும், அவரை மாற்றும்படியும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட முடியாது,’ என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்….

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து