மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுசேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 21.09.2022 முதல் 23.09.2022 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் தமிகள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிக வெப்பநிலை 36-37 டிகிரி செல்ஸியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். செப் 23 வரை மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரம் தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த கற்று விச வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *மீனவர்களுக்கான எச்சரிக்கைமன்னர் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பளத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று கூறியுள்ளனர். …

Related posts

மாத்தூர் கோயிலில் ஆடி திருவிழா

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2 கோடி பயனாளிகளை விரைவில் சென்றடையும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

வடசென்னை பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்: வியாழக்கிழமைதோறும் நடக்கிறது