மேற்குவங்கத்தில் புயல் தாக்கி 2 பேர் பலி; 50 பேர் காயம்: மரங்கள் சாய்ந்தன..வீடுகள் சேதம்..!!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் புயல் தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள மோமாரி கிராம பஞ்சாயத்து பகுதியை புயல் தாக்கியது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்த நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 50 பேர் காயமடைந்ததாக கூச் பெஹார் நகராட்சி தலைவர் ரவீந்திரநாத் கோஷ் தெரிவித்துள்ளார். தொஃஹ்கானி, மத்வங்கா உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளும் புயலுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அசாமில் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்தும் விழுந்துள்ளன. இதேபோல் மிசோரம் மாநிலம் கோலாசிப் மற்றும் மமித் மாவட்டங்களில் புயல் தாக்கியது. கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையுடன் வந்த புயல் காரணமாக தேவாலய கட்டிடம் உள்பட 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புயலால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அசாம் எல்லையை ஒட்டியுள்ள மாமித் மாவட்டத்தில் 18 வீடுகள் சேதமடைந்தன….

Related posts

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்