மேற்குவங்கத்தின் புதிய ஆளுநர் பொறுப்பேற்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆனந்தா போஸ் நேற்று பதவியேற்றார். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுரான இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு மட்டுமின்றி கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெகதீப் தன்கர் ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். இதன் காரணமாக இந்த மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக இல.கணேசன் நிர்வகித்து வந்தார்.இந்நிலையில், கடந்த  17ம்  தேதி மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக, மு்னனாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆனந்த போஸ் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, நேற்று அவர் ஆளுநராக பதவியேற்றார். கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, அவருக்கு பதவிப் பிரமாணம்  செய்து வைத்தார். இதில், முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். …

Related posts

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்