மேட்டூர் டிஎஸ்பி அலுவலகத்தில் லம் சரக டிஐஜி திடீர் ஆய்வு

மேட்டூர், செப்.1: சேலம் சரக டிஐஜி, மேட்டூர் டிஎஸ்பி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ட்டூர் டிஎஸ்பி அலுவலகத்தில், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது டிஎஸ்பி மரியமுத்து பூங்கொத்து வரவேற்றார். அதன் பிறகு காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில், சரக டிஐஜி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து மேட்டூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள மேட்டூர், கருமலைக்கூடல், மேச்சேரி, கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பதியப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டியவை, கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விவரங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர், மேட்டூரில் உள்ள காவலர் குடியிருப்புக்கு சென்று குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கூடுதலாக குடிநீர் வழங்கவும், சேதமடைந்த ஜன்னல்களை மாற்றவும், காலியாக உள்ள குடியிருப்புகளை போலீசாருக்கு ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுடன் கேரம், சதுரங்கம் விளையாடினார். அதன் பிறகு, சிலம்பம், மான் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை மாணவர்கள் செய்து காட்டினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை