மேக் இன் இந்தியா திட்டத்தில் ரூ.7,965 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்

புதுடெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.7,965 கோடி ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் முடிவை பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எடுத்தது. அதன்படி, காமோவ்ஸ்-226டி இலகுரக ஹெலிகாப்டர்களை ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்க திட்டமிட்டது. சீட்டா மற்றும் சேடக் ெஹலிகாப்டர்களுக்கு மாற்றாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலகுரக ஹெலிகாப்டர்களை தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அதன்படி எச்ஏஎல் நிறுவனமும் காமோவ் இலகுரக விமானங்களை தயாரித்து இமயமலைத்தொடரில் சோதனையையும் முடித்துள்ளது. இதே போன்று ராணுவம், விமானப்படைக்கு இலகு ரக ஹெலிகாப்டர்கள், கடற்படை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அமைப்புகள், சூப்பர் ரேபிட் கன் மவுண்ட்ஸ் உள்ளிட்ட துறைகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.7,965 கோடி மதிப்பிலான ராணுவ வன்பொருள்களை வாங்குவதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான டிஏசி நேற்று அனுமதி வழங்கியது. இலகு ரக ஹெலிகாப்டர்களை இரண்டு ஆண்டில் எச்ஏஎல் நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு