மேகதாது அணை குறித்து ஆணைய கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு; அமைச்சர் துரைமுருகன் உறுதி

வேலூர்: மேகதாது அணை குறித்து ஆணைய கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பை தெரிவிப்போம் என்று வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலூரில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டி: நதி நீர் ஆணைய கூட்டத்தில் மேகதாதுவை பற்றி பேச ஆணையத்திற்கு அதிகாரமில்லை. இதுகுறித்து தமிழ்நாட்டின் சார்பில் சொன்ன போதெல்லாம் அதனை ஏற்றுக்கொண்டனர். ஆனால், கர்நாடக அரசு வலியுறுத்தலாலும் ஒன்றிய அரசு தூண்டுதலாலும் அதிகாரம் உண்டு என்கின்றனர். ஒன்றிய அரசு வழக்கறிஞரும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார். சட்ட திட்டத்தில் அதிகாரமில்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் வழக்கறிஞர் ஆலோசனையின் படி ஆணைய கூட்டத்தில் தலையிடுவோம் என கூறுகின்றனர். இது ஒரு வழக்கறிஞர் ஆலோசனையை வைத்து பேசுவது என்பது சரியல்ல.  நாங்கள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பை தெரிவிப்போம்.  மேலும் உச்சநீதிமன்றத்திலும், மேகதாது அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை என தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்