மெட்ரோ ரயில் பணிக்கு நிலம் கையகப்படுத்த நடிகர் கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் 170 சதுர அடி நிலத்தை ஒப்படைக்கக்கோரி மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது முதல் வழித்தட திட்டத்தில் பச்சை மற்றும் நீளம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்டு வந்த சேவை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு மொத்தம் 54 கி.மீ., பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு  பாதைகளிலும் 40 நிலையங்கள் உள்ளன.இந்நிலையில், மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க நிர்வாகம் திட்டமிட்டது.  அதன்படி, மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. சென்னை மாநகர் முழுதும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க திட்டம் வகுக்கப்பட்டு முழு வரைபடமும் தயாரிக்கப்பட்டது. இத்திட்டப் பணிகளை 2026ம் ஆண்டுக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.   இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.61,843 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மண் தர பரிசோதனை உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 90 சதவீதம் மண் தர பரிசோதனை முடிவு பெற்றுள்ளது. இந்தநிலையில், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில் மொத்தம் 40 நிலையங்கள் அமைய உள்ளன. இதில் 18 நிலையங்கள் தரைதளத்திலும், 12 நிலையங்கள் சுரங்கத்திலும் கட்டப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் நிலங்களை கையப்படுத்தும் முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. எனவே, மெட்ரோ ரயில் பணிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் 170 சதுர அடி நிலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே, இந்த இடத்தை கையகப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல அருகில் உள்ள ஒரு சில கட்டிடங்களுக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை