மூளை வளர்ச்சி குறைபாடு உடைய 33 வார கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..

டெல்லி : மூளை வளர்ச்சி குறைபாடு உடைய 33 வார கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 26 வயது இளம்பெண் ஒருவர் தனது 33 வார கருவைக் கலைக்க அனுமதிகோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். கருவிற்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததால் கலைத்துவிடுமாறு மருத்துவர்கள் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங் இதுபோன்ற வழக்குகளின் தாய் முடிவையே இறுதியானதாக பார்க்கவேண்டி இருப்பதாக கருத்து தெரிவித்தார். குழந்தையை பெற்றெடுப்பதில் ஏற்படும் மன வலிகள் அல்லது கருவை கலைப்பதில் உள்ள சிரமங்களை தாய் அறிந்துள்ளார் என்பதை உணர முடிகிறது என்றும் நீதிபதி கூறினார். கர்ப்பிணியின் விருப்பப்படி எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.  …

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை