மூன்று தினங்களுக்கு பிறகு சாரல் குற்றால அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

தென்காசி, ஜூலை 26: குற்றாலத்தில் மூன்று தினங்களுக்கு பிறகு நேற்று சாரல் நன்றாக பெய்தது. அனைத்து அருவிகளில் தண்ணீரும் நன்றாக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் இரண்டு தினங்களுக்கு பிறகு நேற்று சாரல் நன்றாக பெய்தது. பகலில் வெயில் அவ்வளவாக இல்லை. வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரலும் பெய்தது. இதனால் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலிஅருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஆடி மாதம் என்பதாலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதாலும் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்