மூதாட்டியிடம் பர்ஸ் திருடியவர் கைது

ஆத்தூர், செப்.8: கெங்கவல்லி அடுத்த நடுவலூர் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னபொண்ணு(60). இவர் நேற்று காலை, பள்ளக்காட்டில் இருந்து ஆத்தூருக்கு வந்தார். பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், முண்டியடித்துக் கொண்டு சின்னபொண்ணு உள்ளிட்ட பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கினர். அப்போது சின்னபொண்ணு பையில் வைத்திருந்த பர்ஸ் திருடு போனது. அதில் ஒன்றரை பவுன் தங்க காசு வைத்திருந்தார். இதனால் சின்னபொண்ணு கூச்சலிட்டார். இதையடுத்து போலீசார், பஸ் நிலையத்தில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர், பஸ் நிலையத்தில், சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சின்னபொண்ணு பையில் இருந்து பர்சை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்த பர்ஸ் மற்றும் தங்க காசுகள் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை