மூதறிஞர் ராஜாஜி மறைந்த 50வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் டிச.25ம் தேதி அமைச்சர்கள் மரியாதை

சென்னை: மூதறிஞர் ராஜாஜி மறைந்த 50வது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் டிச.25ம் தேதி அமைச்சர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலான அறிவுரைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில், மூதறிஞர் இராஜாஜி மறைந்த 50வது நினைவு ஆண்டை முன்னிட்டு அன்னாரின் பெருமைகளை அடுத்த தலைமுறையினரும் அறிந்து பயன்படுகின்ற வகையில் 25.12.2022 அன்று சென்னை, பாரிமுனை, உயர் நீதிமன்ற வளாகம் அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் செலுத்தவுள்ளார்கள். மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அதனைத் தொடர்ந்து, மூதறிஞர் ராஜாஜி அவர்களின் 50ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 25.12.2022 முதல் 01.01.2023 அன்று வரை சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளியில் உள்ள நினைவில்லத்திலும் அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் உ அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனுமதி இலவசம். என்று கூறப்பட்டுள்ளது. …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்