மூணாறில் கனமழைக்கு வீடுகள் சேதம்

 

மூணாறு, அக். 22: மூணாறு நியூ காலனியில் கனமழைக்கு வீடுகள் சேதமடைந்தது. கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழைக்கு வீட்டின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததில் நியூ காலனியில் வசித்து வரும் வள்ளி,கணேஷ் மற்றும் காளி போன்றவர்களின் வீடு முற்றிலும் சேதமடைந்தது. இந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் நாச நஷ்டம் தவிர்க்கப்பட்டது. வீடு முழுவதுமாக இடிந்ததால் அங்கு வசிக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இரு மாதங்களுக்கு முன் கன மழையில் இதேபோல் வீடு இடிந்த நேரத்தில் இவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அப்போது வீட்டின் ஆபத்தான நிலையை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததே இந்த நிலைக்கு கரணம் என்று வள்ளி கணேஷ் மற்றும் காளி போன்றவர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி