மூடுபனி, சாரல் மழையால் கல்வராயன்மலையில் மரவள்ளி பயிர் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம்

கல்வராயன்மலை : கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் வெள்ளிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் மரவள்ளி பயிரை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் வெள்ளிமலை, கருமந்துறை, மணியார்பாளையம், கிளாக்காடு உள்ளிட்ட 172 சிறு மற்றும் பெரிய கிராமங்கள் உள்ளது. இந்த கல்வராயன்மலையில் மலைமக்கள் பிரதான தொழிலாக மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர். மழை இல்லாமல் வறட்சியின் காரணமாக மரவள்ளி முற்றிய நிலையிலும் அறுவடை செய்ய முடியாமல் இருந்தது. மேலும் மரவள்ளி பயிர்கள் வயலிலேயே காய்ந்து போயிருந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் கல்வராயன்மலையில் பெரும்பாலான கிராமங்களில் பகலில் மூடுபனி சூழ்ந்து இருண்டு காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பகலிலேயே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலையில் உள்ள பெரியார், மேகம், செருக்கல், கவ்வியம் போன்ற நீர்வீழ்ச்சிகளில் அதிகளவில் நீர் கொட்டுகிறது. மேலும் பகலிலும் அதிகளவில் மூடுபனி பொழிவால் சாலைகள் இருண்டு காணப்படுவதால் வாகன ஓட்டிகளால் வாகனம் ஓட்ட முடியாத நிலை உள்ளது. அதேபோன்று கல்வராயன்மலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் மரவள்ளி வளர்ச்சிக்கும், அறுவடை செய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் கல்வராயன்மலையில் உள்ள வயல்களில் மரவள்ளி அறுவடை அதிகளவில் உள்ளதால் மலைமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்….

Related posts

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்