மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை நிறைவு: ஏமாற்றத்துடன் அதிகாரிகள் சென்றதாக ஆர்.எஸ். பாரதி தகவல்

சென்னை: திமுக தலைவரின் மகள் வீட்டில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை  கணவர் சபரீசனின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணைய அனுமதி பெறாமல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.தேர்தலுக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 12 மணிநேரம் நீடித்து வந்த வருமானவரி சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது.இதனையடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:  திமுக தலைவரின் மகள் வீட்டில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 11 மணி நேரம் துருவி துருவி சோதனை நடத்தியும் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். சோதனையின் போது ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது. அதற்கான வங்கி பரிவர்த்தனையை காண்பித்ததும் திரும்பிக் கொடுத்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், ஐ.டி.சோதனை நடத்தி அரசியல் ஆதாயம் பெறலாம் என்று குறுகிய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. தேர்தல் ஆணைய அனுமதி வாங்காமல் ஐ.டி. சோதனை எப்படி நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எல்லா அதிகாரமும் ஆணையத்தின் கையில் உள்ளபோது தன்னிச்சையாக வருமான வரித்துறை சோதனை நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு