முல்லைப் பெரியாறில் புதிய அணை; கேரள தொழில்நுட்பக் குழு அறிக்கை

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதால் சுற்றுச்சூழலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கேரள அரசு நியமித்த தொழில்நுட்பக் குழு சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வரைவு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கேரள முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்தக் காரணம் கொண்டும் புதிய அணை கட்டக்கூடாது என்று கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் புதிய அணை கட்டும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வு நடத்த கேரள அரசு ஒரு தொழில்நுட்பக் கமிட்டியை அமைத்தது.  இந்நிலையில் இந்தக் கமிட்டி ஒரு வரைவு ஆய்வறிக்கையை கேரள அரசிடம் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் புதிய அணை கட்டுவதால் எந்த விதத்திலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியின் இறுதி அறிக்கை ஒரு மாதத்திற்குள் கேரள நீர்ப்பாசனத் துறையிடம் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரைவு ஆய்வறிக்கைக்கு கேரள அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதை தொடர்ந்து புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை கேரள அரசு மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது….

Related posts

கர்நாடக மாநிலத்தில் கடந்த 15 மாதங்களில் 1,182 விவசாயிகள் தற்கொலை

கேரளாவின் வயநாடு பகுதியில் மாற்றுமுறை மருத்துவத்திற்கு சென்றதால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு: தந்தை, சிகிச்சையளித்த நபர் கைது

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்