மும்பை அருகே நடுவானில் சென்னை-பெங்களூரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல் தவிர்ப்பு: பரபரப்பு விசாரணை அறிக்கை

புதுடெல்லி: மும்பை அருகே சென்னை-பெங்களூரு விமானங்கள் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு ஆபத்தான நிலையில் மிக அருகருகே பறந்தது குறித்து பரபரப்பு விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா விமானமும், பெங்களூருவில் இருந்து வதோதராவுக்கு சென்ற இண்டிகோ விமானமும் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு மிக அருகில் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, விமான விபத்து புலனாய்வு பிரிவு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதன் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:  ஜனவரி 29 அன்று, மும்பை வான் பகுதியில் ஏர் ஏசியா இந்தியா விமானத்தின் வழித்தடம் மாற்றப்பட்டது. அப்போது, எதிர் திசையில் இண்டிகோ விமானத்தின் தனது வழக்கமான வழித்தடத்தில் பறந்து வந்தது. இதனால், இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதும் சூழல் இருந்தது. ஆனால் இரு விமானங்கள் வெவ்வேறு உயரங்களில் இருந்தது. இந்த நேரத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் ஆட்டோமேஷன் அமைப்பு ‘மோதல் எச்சரிக்கையை’ வெளியிட்டது. இருப்பினும், கட்டுப்பாட்டாளர் மோதல் எச்சரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. பிறகு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் நிலைமையை உணர்ந்த நேரத்தில், ஏர் ஆசியா இந்தியா விமானம் 38,008 அடியை எட்டியபோது இண்டிகோ விமானம் 38,000 அடி உயரத்தில் பறந்தது. ஏர் ஏசியா இந்தியா விமானம் அதன் ஏற்றத்தைத் தொடர்ந்தது. ்அந்த விமானம் 38,396 அடி உயரத்தில் இருந்தபோது, இண்டிகோ விமானம் 38,000 அடி உயரத்தில் பறந்தது. இரண்டு விமானங்களுக்கிடையேயான தூரம் 8 கி.மீ. மட்டுமே இருந்தது. செங்குத்தாக 300 அடி உயர இடைவெளி இருந்தது. ஏர் ஏசியா இந்தியா விமானம் இண்டிகோ விமானத்துக்குக் கீழே இருந்தபோது 6.5 கி.மீ. மற்றும் 500 அடி இடைவெளி இருந்தது. எனவே, சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் ஆட்டோமேஷன் அமைப்பில் உருவாக்கப்படும் எச்சரிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கட்டுப்பாட்டாளருக்கு பொருத்தமான திருத்த பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்