முன்னுரிமை அடிப்படையில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம்

திருவள்ளூர்: விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குறைந்த வாடகைக்கு வேளாண் இயந்திரம் வழங்கப்படும் என கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்குகிறது. இதையொட்டி, திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வேளாண் இயந்திரங்களான 4 மண் தள்ளும் இயந்திரங்கள், 10 டிராக்டர்கள், 2 டயர் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன.நிலம் சமன் செய்தல், கரும்பு, காய்கறி நாற்று நடவு செய்தல், பல்வேறு பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல். வாழைத் தண்டை துகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல், நீர் இறைத்தல் உள்பட வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளனடிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340, நிலம் சமன் செய்ய மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.840, மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைக்க, புதர்களை அகற்றவும், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660 என குறைந்த வாடகைக்கு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.மேற்குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகத்தில் அணுகி பயனடையலாம்,மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர்கள் திருவள்ளுர் 9443957921, திருத்தணி 9789597447, பொன்னேரி 9789597447 மற்றும் திருவள்ளுர் செயற் பொறியாளர் 9585709929 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது….

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்