முன்னதாக துவங்கும் தென்மேற்கு பருவமழை: ஊட்டியில் கொட்டி தீர்த்தது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதி வாரத்தில் மழை பெய்யும். தொடர்ந்து ஜூன் மாதம் துவக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை துவங்கும். தொடர்ந்து 3 மாதங்கள் எந்நேரமும் மழை பெய்யும். கடந்த ஜனவரி மாதம் முதலே மழை பெய்து வருகிறது. எனினும், கடந்த வாரம் மழை சற்று குறைந்தே காணப்பட்டது. வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு நேற்று முன்தினம் ஊட்டியில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழை விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மழையால் விடுதலை கிடைத்துள்ளதால் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு ெதன்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை (3ம் தேதி) மழை துவங்கும் என கூறப்படுகிறது. எனவே இனி மழை அடிக்கடி பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, புறநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் ஊட்டியில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. தொடர் மழையால், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற பகுதிகளில் உள்ள மலர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேக மூட்டம் மற்றும் மழையின் காரணமாக ஊட்டியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்