முத்தூரில் தேங்காய், கொப்பரை ஏலம்

வெள்ளகோவில், ஏப்.16: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 23 பேர், நேற்று விற்பனை கூடத்திற்கு 3758 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 26.85 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 25.85 ரூபாய்க்கும் ஏலம் போனது. 1.6 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.39 ஆயிரத்துக்கு ஏலம் போனது என, விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார். முத்தூரில் கொப்பரை ஏலம்:முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.41 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடந்தது.முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில் 1953 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 80.70 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1953 கிலோ கொப்பரை, ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை