முத்துமாாியம்மன் கோயில் பூ குண்டம் திருவிழா

 

ஊட்டி, மே. 3: ஊட்டி அருகே செலவிப் நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாாியம்மன் கோயிலில் 13ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் ஊட்டி காட்டோி டேம் அருகே செலவிப்நகர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாாியம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பூ குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இம்முறை 27ம் ஆண்டு திருவிழா மற்றும் 13ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா ஆகியவை கடந்த 28ம் தேதியன்று கொடியேற்றம் மற்றும் இரவு அம்மன் கரகம் பாலித்து செல்லுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து அம்மன் அலங்கார பூஜை, ஊர்வலம், மாவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணிக்கு கங்கனம் கட்டும் நிகழ்ச்சி, அக்கனி சட்டி எடுத்து வருவதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1 மணியளவில் பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பூ குண்டம் இறங்கினர். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, மாலையில் மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை