முதல் முறையாக கண்டுபிடிப்பு அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள்: பருவநிலை பாதிப்பின் பின்விளைவு

மெல்போர்ன்: அண்டார்டிகாவின் பனியிலும் கூட பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இது பனி உருகுவதை விரைவுபடுத்தி பருவநிலை மாற்றத்தை மேலும் மோசமாக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அழிக்க முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் மனித குலத்திற்கும், சுற்றுச்சூழலுக்குள் பல்வேறு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எல்லா இடத்திலும் நுழைந்து விட்ட இந்த பிளாஸ்டிக், மனிதர்களே வசிக்காத அண்டார்டிக் பனிப் பிரதேசத்திலும் பரவியிருக்கும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நியூசிலாந்தின் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிக்கும் மாணவி அலெக்ஸ் ஏவ்ஸ் கடந்த 2019ம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்குள்ள ராஸ் பனிப் படுகைகளில் புதிதாக உருவான பனிக்கட்டிகளை சேகரித்து, பிளாஸ்டிக் நுண்துகள்கள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளார். இந்த ஆய்வில், அரிசியை விட மிக நுண்ணிய பிளாஸ்டிக் நுண்துகள்கள் அண்டார்டிகா பனியிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. 19 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், 13 வகையான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிகமாக குடிநீர் பாட்டில்கள் செய்ய பயன்படுத்தும் பெட் என சுருக்கமாக அழைக்கப்படும் பிளாஸ்டிக் நுண்துகள் இருந்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் உருக்கிய பனிக்கட்டியின் தண்ணீரில் சராசரியாக 29 பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்துள்ளன.அண்டார்டிகாவின் பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இந்த பிளாஸ்டிக் துகள்கள் பல ஆயிரம் கிமீ காற்றில் பயணித்து அண்டார்டிகாவுக்குள் நுழைந்திருக்கலாம் அல்லது அங்கு ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வு மையத்தின் மூலமாக பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பல்வேறு பருவநிலை மாற்றத்தால், அண்டார்டிகா பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. இந்த நிலையில் பனிக்கட்டியில் பிளாஸ்டிக் துகள் இருப்பது பனிக்கட்டிகள் உருகுவதை மேலும் வேகமாக்கும். பொதுவாக பனிக்கட்டிகள் சூரிய ஒளியை வெளித்தள்ளும் தன்மையை கொண்டவை. ஆனால், அவைகளுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் சூரிய ஒளியை உள் இழுத்து, பனிக்கட்டிகள் வேகமாக கரைய வழி வகுக்கும். இது பூமிக் கோளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்….

Related posts

ஈரானின் கிழக்கு பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழப்பு

வாக்குப்பதிவு முடிந்தவுடன் விடியவிடிய நடந்த வாக்கு எண்ணிக்கை; இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே: 3வது இடத்தில் ரணில்; 5ம் இடத்தில் ராஜபக்சேவின் மகன்

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை