முதல் ஒருநாள் போட்டியில் இன்று வங்கதேசம் – இலங்கை மோதல்

டாக்கா: வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மிர்பூர் தேதிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது. வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.  முதல் ஆட்டம் இன்றும், 2வது ஆட்டம்  மே 25ம் தேதியும், 3வது ஆட்டம்  மே 28ம் தேதியும் நடக்கின்றன. கொரோனா பரவல்  காரணமாக 3 ஆட்டங்களும் மிர்பூர் தேசிய அரங்கில் மட்டுமே நடக்கும்.  பூட்டிய அரங்கில் நடைபெற உள்ள இந்த ஆட்டங்களை காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.இலங்கையின் புதிய கேப்டன் குசால் பெரேரா, துணை கேப்டன் குசால் மெண்டிஸ் சந்திக்கும் முதல்  தொடர் இது. அந்த அணியில் அறிமுக வீரர்கள் பலர் களமிறங்க உள்ளனர். தனஞ்ஜெயா டி சில்வா, இசுரு உடனாவுக்கு மீண்டும்  வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. துடிப்பான இளம் வீரர்கள் வங்கதேசத்தை எதிர்கொள்ள காத்திருக்கின்றனர்.  வங்க்தேச அணிக்கு சமீபத்திய போட்டிகள் அத்தனை உற்சாகமானதாக இல்லை.   மார்ச் மாதம்  நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 0-3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. எனினும், சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு  பலம்.  ஜனவரியில் நடந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்ததும், ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் அணியில் இணைந்திருப்பதும் நம்பிக்கை கொடுக்கிறது.  கேப்டன் தமீம், முஷ்பிகுர், மகமதுல்லா ஆகியோர் சிறப்பாகப் பங்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.வங்கதேசம் போல் இலங்கையும் கடைசியாக  விளையாடிய ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசிடம் இழந்துள்ளது.  இரு அணிகளும் மோதிய கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில் இலங்கை 3-1 என முன்னிலை வகிக்கிறது. உலக கோப்பை (2019) தொடரில் ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.இரு அணிகளுமே தொடரை வெற்றயுடன் தொடங்க வரிந்துகட்டுவதால் ஆட்டம் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை….

Related posts

சில்லி பாயின்ட்…

சீனா ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா

இரானி கோப்பை இன்று தொடக்கம்