முதல் அலையில் பதிவான எண்ணிக்கையை விட சென்னையில் அதிகளவில் தொற்று பதிவாகிறது: ஐசிஎம்ஆர் பிரதீப் கவுர் டிவிட்டரில் பதிவு

சென்னை: முதல் அலையில் பதிவான எண்ணிக்கையை விட சென்னையில் அதிக கொரோனா தொற்று பதிவாகிறது, வேகமாக பரவுகிறது என்று ஐசிஎம்ஆர் தமிழக பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 10ம் தேதி 1,977 பேர், 11ம் தேதி 2,124 பேர், நேற்று 2,105 பேர் என நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட அதிகரித்து வருகிறது. அதேபோன்று உயிரிழப்பும் சென்னையில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஐசிஎம்ஆர் பிரதீப் கவுர் நேற்று டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘முதல் அலையில் பதிவான எண்ணிக்கையை விட சென்னையில் அதிக தொற்று பதிவாகிறது. கடந்த ஆண்டை விட சென்னையில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. கடந்த ஜுன் மாதம் இறுதியில் 2 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்புதான் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தற்போது உள்ள நிலையில் தொற்று பாதிப்பு உயரும். தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தினாலும் தொற்று குறைய 14 நாட்கள் வரை ஆகும். எனவே பொதுமக்கள் அத்தியாசிய தேவை தவிர்த்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், 3 மாதங்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். பணியிடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், அறிகுறி இருந்தால் சோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என கூறியுள்ளார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்