முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் இந்து சமய அறநிலையத்துறை சீரமைப்பு ஒரு பெரிய வெற்றி; ஆலோசனைகுழு உறுப்பினர்கள் புகழாரம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் அறநிலையத்துறை சீரமைக்கப்படுவது ஒரு பெரிய வெற்றி என்று இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைகுழு உறுப்பினர்கள் புகழாரம் தெரிவித்தனர். கோயில்களில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவது, பராமரிப்பது, செம்மைப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலோசனை குழு உறுப்பினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியது: அறநிலையத்துறையின் வெளிப்படைத் தன்மை, கோயில் நிர்வாகத்தை வெளிப்படைத் தன்மைக்கு உட்படுத்தியிருப்பது, பல நல்ல திட்டங்களை, பக்தர்களுக்கு மேம்படுத்தக்கூடிய வசதிகளை உருவாக்கியிருப்பது இவையெல்லாம் வரவேற்பிற்குரியது. சமய இலக்கிய சொற்பொழிவுகள் பேரிடர் காலத்தில் காணொலி வாயிலாகவும் சொற்பொழிவுகளை நாம் நிகழ்த்தலாம்.  ஆலோசனை குழு உறுப்பினர் சுகிசிவம்:நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வர் நேர் பார்வையில் அறநிலையத் துறை சீரமைக்கப்படுவது ஒரு பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டும். காரணம், அந்தந்த அமைச்சரிடத்தில் விட்டுவிட்டு, முதல்வர் இதை முழுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இந்தத் துறையினால் எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் மிகுந்த அக்கறையோடு இதை நேரடியாக பார்ப்பதற்கு, இந்தக் குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய சூழ்நிலையில் இந்து மதத்தின் கேந்திரம் எது என்று கேட்டால், கோயில், திருமடங்களைத் தாண்டி சில தனிநபர்களுடைய ஆசிரமங்கள் இன்றைக்கு இந்து மதத்தின் கேந்திரமாக மாறியிருக்கிறது. இதை அறநிலையத் துறை முறியடித்து, கோயில்கள் தான் இந்துக்களுடைய மையப் பகுதி என்பதை நீங்கள் மீண்டும் புதுப்பித்து விட்டால், இந்து சமயத்திற்கு அது மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்பதை நான் முதலில் பணிவோடு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ்ப் புலவர்கள், கோயிலில் கூட்டம் சேர்கின்ற நாட்களில் கண்டிப்பாக பேசுவதற்குரிய ஒரு வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.ஆலோசனைக்குழு உறுப்பினர் தேச மங்கையர்க்கரசி :அறநிலையத்துறையில் சிறப்பான திட்டங்களை தீட்ட முதல்வர் நிறைகளையும் மட்டும் காதில் கேட்டுக் கொள்ளாமல், குறைகளையும் கேட்டு, அந்த குறைகளைக் களையக்கூடிய ஒரு ஆட்சியின் கீழ் வரக்கூடிய மக்கள் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு வாழ்க்கையாக அமையும் என்பதற்கேற்ப நிறைய குறைகளை இந்து சமய அறநிலையத் துறை தற்போது நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறது.  ஆலோசனை குழு உறுப்பினர் தரணிபதி ராஜ்குமார் : இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கே முதலவ்ர் வந்து, இந்த உயர்மட்டக் குழுவின் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியிருப்பது, தமிழகத்தில் வாழ்கின்ற இந்துக்களுக்கும் அதை எதிர்க்கிறவர்களுக்கும் அவர் ஒரு நல்ல செய்தி….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை