முதல்வர் டிவிட்டர் பதிவு திராவிட மாடலில் தமிழ்நாட்டை அமைப்போம்

சென்னை: திராவிட மாடலில் தமிழ்நாட்டை அமைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற முதலாமாண்டு முத்தான தொடக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் ஆண்டு நிச்சயம் இணையற்ற ஆண்டாக இருக்கும். வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து திராவிட மாடலில் நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம். எந்நாளும் உழைப்பேன், தமிழ்நாட்டைக் காப்பேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்….

Related posts

கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு : வைகோ கண்டனம்

சொல்லிட்டாங்க…

கலைஞர் குறித்து விமர்சனம், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் பேச்சு சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: தலைவரின் கண் அசைவுக்காகத்தான் கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள்; அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு பேட்டி