முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை

 

திருப்பூர், செப். 13: திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 2, வடக்கு தீயணைப்பு துறை இணைந்து கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்த வெளி அரங்கில் அவசரகால முதலுதவி பயிற்சி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். தீயணைப்பு உதவி அலுவலர் வீரராஜ் கலந்து கொண்டு பேசுகையில்: விபத்தில் காயமடைந்தவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது,இதய நுரையீரல் மீட்பு பயிற்சியை (சி.பி.ஆர்) பற்றி விளக்கினார்.

இயற்கை சீற்றங்களான நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களில் எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கினால்,அவர்களை காப்பாற்றும் வழிகளையும், யுக்திகளையும் பற்றி பேசினார்.மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்து மாணவர்களை வைத்து செயல்முறை விளக்கத்தோடு விவரித்தார். மாணவ செயலர்கள் மது கார்த்திக்,தாமோதரன்,நவீன் குமார் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு குழுவினர் பயிற்சி அளித்தனர். இறுதியாக மாணவ பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி நன்றியுரை கூறினார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்