மீண்டும் திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை

 

ஈரோடு, ஜூன் 13: பழுதடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்த மனு விவரம் வருமாறு: ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை, சேமூர் பஞ்சாயத்து, பெரும்பாறையில் உள்ள குரங்கன்பள்ளத்தில் 20 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கான ஊர் பொது குடிநீர் குழாய் கடந்த 3 மாதங்களாக பழுதடைந்து இருப்பதால் தண்ணீர் வரவில்லை. இதை சீரமைக்க வலுயுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, குடிநீர் குழாயை சரி செய்து, உடனடியாக குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்