மீண்டும் உச்சம் தொட்ட தங்க விலை: சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.37,328-க்கு விற்பனை

சென்னை: இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்த நாட்களில் மிகப் பெரிய அளவில் உச்சம் அடைகிறது. இம்மாத தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மறுநாளே தங்க விலை மேலும் அதிகரித்தது.இதனால் நகை பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் கடும் இறக்கம் கண்டு விற்பனை செய்யப்பட்டதால், பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இதற்கு நேர்மாறாக இம்மாத்தின் தொடக்கம் முதலே, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறியது. மேலும் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்த விலைக்கு  விற்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 14,15 தேதிகளில் தங்கத்தின் விலை ஓரளவு குறைந்து, சவரன் ரூ.37,000-க்கும், ஒரு கிராம் ரூ.4,600-க்கும் விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.296 குறைந்து, ரூ.37,040-க்கும், ஒரு கிராம் ரூ.4,630-க்கும் விற்பனையானது. இதனால் நகை வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. ஆனால், இன்று அதற்கு நேர்மாறாக, தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது. ஆம்..!! இன்று ஒரே நாளில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.37,328-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை கிராமுக்கு ரூ.36 உயர்ந்து ரூ.4,666-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூ.60 காசு உயர்ந்து, ஒரு கிராம் ரூ.61.60-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61,600-க்கும் விற்கபட்டு வருகிறது….

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து சவரன் ரூ.54,560-க்கு விற்பனை