மீஞ்சூர் பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் மீஞ்சூர் பேரூராட்சியில் 2வது வார்டு அரியன் வாயல் பகுதியில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  துவக்கி வைத்தார். துணை இயக்குநர் மக்கள் நலப்பணிகள் டாக்டர் ஜவஹர்லால் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை, இருதயம், ஈசிஜி, கண், பல் சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை, சித்தா – யுனானி மற்றும் பால்வினை நோய்கள், சளி இருமல் தொண்டை பரிசோதனைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ்,  துணை தலைவர் அலெக்சாண்டர், வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ், திமுக மீஞ்சூர் நகர செயலாளர் மோகன்ராஜ். வார்டு கவுன்சிலர் அபூபக்கர், சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அப்துல் வகாப், திமுக நிர்வாகிகள் சைய்யது அலி, யுசுப் இளைஞர் அணி நிர்வாகிள் சமத் சாகுல், பஷிர் அகமது, அசாருத்தின் காங்கிரஸ் நிர்வாகிகள் அன்பரசு, சுகுமார், சித்திக் பாஷா, சமூக ஆர்வலர்கள் வினோத், சாலமன் காமராஜ், தினேஷ், ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அரியன்வாயல் அரசு நடுநிலைப்பள்ளிக்கு 2 புதிய கழிப்பறைக்கு  அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. …

Related posts

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு