மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் விழா

சேலம், ஜூன் 6: தேசிய சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சேலம் நீதிமன்ற வளாகத்தில், மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாவட்ட நீதிபதி சுமதி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மியாவாக்கி என்பது, அடர் காடுகளை உருவாக்குவது ஆகும். ஆழமான குழி தோண்டி, அதில் மக்கும் குப்பைகளை கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் மரக்கன்றுகளை நடுவது மியாவாக்கி என அழைக்கப்படுகிறது. அதன்படி, நீதிமன்ற வளாகத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி