மின் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருவள்ளூர் கோட்டம் சார்பாக மின்சார பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் திருவள்ளூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயற்பொறியாளர் கனகராஜன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் குமார், சேகர், யுவராஜ், பாலச்சந்தர், ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர்கள் எஸ்.என்.கஜேந்திரன், தட்சிணாமூர்த்தி, பாலாஜி, சதீஷ், நசீம்பாய், குமரவேலு ஆகியோர் வரவேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மின்சார வாரிய பாதுகாப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் கீதா கலந்துகொண்டு மின்சார வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து மின்சார வாரியம் ஊழியர்களும் கலந்துகொண்டனர்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை